திங்கள், 24 செப்டம்பர், 2012

அன்னை கதீஜா பெண்கள் கலை & அறிவியல் கல்லூரி

அன்புடையீர்,,,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),,,
கண்ணியமிக்க சகோதரர்களே 
தமிழக முஸ்லிம் மக்களின் கல்வி நிலை மேம்படவும் மக்களை கல்வி ரீதியிலும்,வாழ்வியல் ரீதியிலும் பொருளாதார நிலையிலும் மேம்படவும் அதற்கான வழிகளை தேடி செல்ல கூடிய நிலையில் நாம் உள்ளோம், கல்வி ரீதியாக நாம் விழிப்புணர்வு அடைய வேண்டிய அவசியத்தை உணர வேண்டும் , நவீனம் என்ற பெயரில் அந்நிய ஆதிக்க சக்திகள் நம்முடைய கலாச்சாரத்தையும் வாழ்வியல் அடையாளத்தையும் அழிக்கவேண்டும் என்கின்ற நீண்ட திட்டத்தை இன்று  செயல் படுத்தி வருகின்றனர்.
அல்லாஹ்(சுபு) நமக்கு அருளிய குர்ஆன் காட்டிய நெறியிலும் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டிய வழியிலும் நாம் வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும், அத்தகைய நிலையில் தான் நாம் கல்வியும் கற்க வேண்டும் , மார்க்கம்  கூறிய கல்விமுறை நம்மக்களிடையே அறியபடாத சூழ்நிலையில் அதற்கான விழிப்புணர்வு நிகழ்சிகளை சமூக நீதி அறக்கட்டளையின் சார்பில் அதன் நிறுவனர் சகோ CMN சலீம் அவர்கள் கடந்த 10 வருடங்களாக இறைவனின் கிருபையால் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்தி வருகிறார்கள்,அதன் மூலம் நம் சமுதாய மக்களும் விழிப்புணர்வு அடைந்து,ஆதரவு தந்து கொண்டுயிருகிரார்கள் அல்ஹம்துலில்லாஹ்.
கடலோர ஊர்களில் வாழும் முஸ்லிம் பெண்களின் கல்வி நிலையை மேன்படுத்தி பெண்களை அறிவில் சிறந்த கல்வியாளர்களாக மார்க்க கல்வியும் கற்ற பெண் கல்வியாளர்களை உருவாக்கும் நோக்கத்தில் சகோ CMN சலீம் அவர்கள் தலைவராக உள்ள தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் மூலம் நம்முடைய சமுதாய சொந்தங்களின் பங்களிப்பில் அம்மாபட்டினத்தில் இன்ஷா அல்லாஹ் வரும் கல்வி ஆண்டு முதல் அன்னை கதீஜா பெண்கள் கலை & அறிவியல் கல்லூரி செயல்படும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது, இதன் முலம் இப்பகுதியை சேர்ந்த முஸ்லிம் பெண்களின் கல்வி நிலை உயரும் , பெண் கல்வியாளர்களை உருவாக்கும் BISED (bachelor of islamic school education ) என்கிற சிறப்பு பாடத்திட்டம் 40 மாணவிகளை கொண்டு இயங்கி வருகிறது 
6 கோடி திட்ட செலவில் ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரி இது வரை 119 பங்குதாரர் மூலம் பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது . 31 பங்குகள் மீதி உள்ளது,ஒரு பங்கு தொகை 4 லட்சம் .இறைவனின் மார்க்க கல்வியை கற்று கொடுக்கும் நோக்கத்தில் உருவாக உள்ள இக்கல்லூரியில் பங்களிப்பு செய்து இறைவனின் அருளை பெற கேட்டு கொள்ளுகிறோம்   மேலும் தகவல்களுக்கு கீழ்க்கண்ட அலைபேசியில்  தொடர்பு கொள்ளவும்  
துபாய் -இம்ரான் கரீம் -0559739408
தமிழகம் -CMN சலீம் -9382155780 / 9840182251
 .
வரும் 30,1,2,3 ஆகிய தேதிகளில் சகோ CMN சலீம் அவர்கள் அமீரக சுற்று பயணம் மேற்கொள்ளயிருகிறார்கள் என்பதை தெரிவித்துகொள்கிறோம்.

வஸ்ஸலாம் ,
மக்கள் தொடர்பு செயலகம் ,
துபாய்
M.IMRAN KAREEM
+971559739408
imran2mik@gmail.com
அடுத்த தலைமுறையை படித்த தலைமுறையாக்கிட
ஒருங்கிணைந்து கல்விச் சேவை செய்வோம்; சமூகத்தை உயர்த்துவோம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக